Lifestyle | வாழ்க்கைமுறை
இன்று உலகின் முக்கிய நாள். என்ன நாள் தெரியுமா?

பிப்ரவரி 4ம் தேதி என்ன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் சராசரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
அதற்கு சிறந்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறிந்தால் ஆரம்பத்தில் தடுக்கலாம் என உலக சுகாதார துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

cancer world
வருமானம் குறைந்த மற்றும் சராசரி வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் அதிகலயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அதிக அளவில் வருமானத்தில் வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் 90% புற்று நோய்க்கான சிகிச்சை கிடைப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் புற்று நோய் வந்து விட்டால் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தமில்லை எனவும் முறையான சிகிச்சையும் ஒழுங்கான பழக்க வழக்கங்களும் இருந்தால் போதும் புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என தெரிவித்துள்ளனர்.
மற்ற நோய்களைப் போல புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
