இன்றைய கால கட்டத்தில் படம் வெளிவந்து கோடி கோடியாக வசூல் செய்வது சாதனை இல்லை. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வரும் போதே லைக்ஸ், ஹிட்ஸ் என தமிழ் சினிமா உலக அளவில் சாதனைகள் படைத்து வருகின்றது.

இந்நிலையில் இதில் விஜய், அஜித் ரசிகர்கள் தான் இந்த சாதனையை மாறி மாறி செய்து வருகின்றனர். ஆனால், இந்த முறை சூர்யா ரசிகர்களும் களத்தில் இறங்கவுள்ளனர்.

சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் 24 படத்தின் டீசர் பிப்ரவரி 24ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தெறி டீசரின் சாதனையை முறியடிக்க சூர்யா ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.