Technology | தொழில்நுட்பம்
கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் சமூக வலைதளங்கள்.. ஃபேஸ்புக்கில் இனி ஒரு அக்கௌன்ட் தான்!
கட்டுப்பாடுகளை இன்னும் துரிதப்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் சேனல்கள்.
சமூகவலைதளங்களில் எவ்வளவோ நன்மைகள் இருக்கிறதோ அதற்கு ஈடாக தீமைகளும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
பல கோடான கோடி மக்கள் பயன்படுத்தும் சோசியல் மீடியா நெட்வொர்க்குகளை கட்டுப்படுத்துவதற்கான பல விதிமுறைகளை இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக இனி பதிவிடும் பதிவுகள் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் மற்றும் அப்படி இல்லை என்றால் அந்தப் பதிவுகளை பக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

facebook-mark
இதுமட்டுமல்லாமல் இனி வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காத பக்கங்களை அல்லது வீடியோக்களை முன்னுரிமை கொடுக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கில் இனி ஒருத்தருக்கு ஒரு அக்கவுண்ட் தான் வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை மூன்றாவது ஒரு கம்பெனிக்கு விற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எவன் எப்படி போனாலும் நம்மளோட பாதுகாப்பு நாமதான் பார்த்துக்கணும்.
