சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவி முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இன்றுவரை ரசிகர்கள் பேசக்கூடிய டாப் 10 பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் பற்றி சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் தொடர்ந்து பேசுவதன் மூலம் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.
எனவே விஜய் டிவியின் டாப் 10 நிகழ்ச்சிகள், சூர்யா தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை சொல்லலாம். இதில் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளை மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேட்கப்படும் சுவாரசியமான கேள்விகள் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தது.
இதேபோன்று பொது அறிவு சம்மந்தப்பட்டது மட்டும் அல்லாமல் தமிழ் வார்த்தைகளோடு விளையாடும் ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியானது பாடகர் ஜேம்ஸ் வசந்த் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாகும். தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது! இது! எது!’ என்ற கேம் ஷோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிகழ்ச்சியாகும்.
அத்துடன் விஜய் டிவியில் காமெடியன்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த ‘லொள்ளு சபா’ மற்றும் ‘கலக்கப்போவது யாரு?’ என்ற இரு நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சமையல் நிகழ்ச்சிகளில் புது மாற்றத்துடன் கொண்டுவரப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியானது சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ரசிகர்களிடையே ஆர்வத்தை மென்மேலும் தூண்டிக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக திகழும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியானது ஜூனியர் மற்றும் சீனியர் என்ற இரு பிரிவில் நடத்தப்பட்டு திறமையான பாடகர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அதுமட்டுமின்றி சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகளை மேடை போட்டு பேசக்கூடிய வகையில் கோபிநாத் தொகுத்து வழங்கும் ‘நீயா நானா’ என்ற விவாதம் செய்யும் நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் ஜெகன் தொகுத்து வழங்கிய ‘கனெக்சன்’ என்ற வித்தியாசமான கேம் ஷோ விஜய் டிவியில் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க தூண்டிய நிகழ்ச்சியில் ஒன்றாகும்.
இவ்வாறு விஜய் டிவியையே பொழுதுபோக்கு உகந்த சேனலாக மாற்றிய இந்த 10 நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவியை தூக்கி நிறுத்தியதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக மற்ற சேனல்கள் புது புது ஷோக்களை அறிமுகப்படுத்தினாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.