அப்பா எங்க வாழ்க்கையை சீரழிச்சுட்டாரு.. மெசேஜ் அனுப்பிவிட்டு 3 பெண்கள் தற்கொலை

அப்பாவின் தவறான நடத்தை தான் தங்கள் சாவுக்கு காரணம் என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, தாய், தங்கையுடன் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சித்தய்யா அங்கு மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மானசா என்ற 17 வயது மகளும், பூமிகா என்ற 15 வயது மகளும் உள்ளனர்.

சித்தய்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. விஷயம் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது. இதனால் கணவனிடம் கோபத்தில் சண்டை போட்டுள்ளார். ஆனால் சித்தய்யா கோபமடைந்து தன் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்.

காதலியுடன் வீட்டை விட்டே கணவன் போய்விட்டதால், ராஜேஸ்வரி வேதனை அடைந்தார். சித்தய்யாவின் 2 மகள்களும் மனம் நொந்து போனார்கள். அதனால் எல்லாருமே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் மூத்த மகள் மானசா, தனது தாய் மாமனுக்கு, அதாவது ராஜேஸ்வரியின் அண்ணனான புட்டசாமிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார்.

அதில், “ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் சாவுக்கு அவர்தான் காரணம்” என்று இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பதறியடித்துக் கொண்டு சகோதரி வீட்டுக்குச் சென்றார். ஆனால் வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. உடைத்துக் கொண்டு சென்று பார்த்தால், தூக்கில் 2 மகள்களுடன் தங்கை சடலமாக தொங்கிகொண்டிருந்தார். அவர்களை பிடித்து கதறி அழுதார் புட்டசாமி. உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment