அப்பா மகன் முதல் முறையாக இணைந்து நடிக்கப்போகும் படம் இது தான்.

நடிகர்களின் வாரிசு  சினிமாவிற்கு நடிக்க வருவது ஒன்றும் புதியதல்ல. இது காலம் காலமாக இந்திய சினிமாவில் நடக்கும் ஒரு நிகழ்வு தான்.

கவுதம் கார்த்திக்-

மணிரத்தினத்தின் கடல் படம் மூலமாக 2013ல் அறிமுகம் ஆனாலும், இவரின் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்னவோ 2017  ஆம் வருடம் தான். ரங்கூன், இவன் தந்திரன், ஹாரா ஹாரா மஹாதேவக்கி என்று இவ்வருடம் ஹாட்ட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

நவரசநாயகன் கார்த்திக்-

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த படம் அனேகன். அதில் மாஸ் வில்லனாக வந்து தன் நடிப்பின் மற்றோரு பரிணாமத்தை வெளிப்படுத்தினார். தற்போழுது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.

அப்பா மகன் காம்போ-

சில பல வருடங்கலாகவே, பலர் முயற்சி எடுத்தும் இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. கார்த்திக்கிடம் அடிக்கடி இதை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது ” இதுவரை சரியான கதையாக எதுவும் அமையவில்லை” என்றே பதில் கூறினார்.

இயக்குனர் திரு-

மூன்றே படங்கள் எடுத்திருந்தாலும் , ட்ரெண்டியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பெயர் எடுத்தவர். தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று இவருடைய  மூன்று படத்திலும் விஷால் தான் ஹீரோ. இயக்குனரின்  புதுப் பட அறிவிப்பு இன்று வந்தது. இப்படத்தில் கார்த்திக், மற்றும் கௌதம் நடிக்க இருப்பதாக  இவர் தன் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்தார்.

படத்தின் கதைக்களம்-

தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் அப்பா மகன் கதாப்பாத்திரத்தில் இருவரும் நடிக்கப்போகிறார்கள். மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படம்.  அரசு அதிகாரியாக பணி புரியும் காத்திக், பாக்சாராக வரும் கௌதம்  கார்த்திக்.  இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உண்டு. பெயர் வைக்கப்படாத இப்படத்தில் நடிக்க மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது .அப்பா மகன் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் பதிவு செய்யப் போகிறார் இயக்குனர்.

இப்படத்தை பற்றி கேட்ட பொழுது-

“மற்றவர்களுடன் நடிப்பதை விட, குடும்பத்தினருடன் நடிப்பது என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்படத்தில் என்னுடன் நடிக்கப்போகிறவர் ஒரு லெஜெண்ட், மேலும் எனது தந்தையும் ஆவார், அதனால் படபடப்பாகவும் , அதே சமயம் ஆர்வமாகவும் உள்ளேன். அவருடன் இணைந்து நடிக்கப்போகிறான் என்ற சந்தோசமே மிகுதியாக உள்ளது” என்று கூறினார்  கவுதம் கார்த்திக்.

“கவுதம், திருவின் இந்த ஸ்கிரிப்ட் கேளுங்கள் என்றார். கதை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. நான் சில காலமாக  கேட்ட  கதைகளிலேயே மிகவும் அருமனையான ஸ்கிரிப்ட் இது தான்.” என்று கூறினார்  கவுதம் கார்த்திக்.

சினிமாபேட்டை கிசு கிசு: பாக்ஸர் கதாப்பாத்திரம் என்பதால், கௌதம் கார்த்திக் தாய்லாந்து சென்று மூன்று வாரம்  பாக்ஸிங்  பயிற்சி எடுக்கப்போகிறாராம்.

Comments

comments