Videos | வீடியோக்கள்
வில்லனாக WWE ஜான் சீனா.. பட்டையைக் கிளப்பும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 தமிழ் ட்ரைலர்
Published on
ஒரு சில ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் செம வரவேற்பு இருக்கும். அந்த வகையில் மார்வெல் மற்றும் டி சி போன்ற நிறுவனங்களின் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
அதேபோல் ஒரு ரசிகர் கூட்டம் தான் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற படத்திற்கும் உள்ளது. கார் ரேஸ் மையமாக வைத்து உருவாகிவரும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களுக்கு எப்போதுமே இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் தற்போது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 (Fast & Furious 9 ) விரைவில் வெளியாக உள்ளது. இதில் வில்லனாக WWW ஜான் சீனா நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. முந்தைய சில பகுதிகளில் WWW ராக் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
