Videos | வீடியோக்கள்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் டிரெய்லர்.. மிரள வைக்கும் அந்த ஒரு கார் காட்சி!
80களில் பிறந்தவர்களாக இருந்தாலும், 90களில் பிறந்தவர்களாக இருந்தாலும், 2கே கிட்ஸ்குகளாக இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்த ஹாலிவுட் பட சீரியஸ் என்றால் அது பாஸ்ட் அன்ட் பியூரியஸ் தான். முதல் பாகம் 90களில் ஆரம்பித்தது. சக்கை போடு போட அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக ஆரம்பித்தன,
இப்படி வெளியாகி வெளியாகி இப்போது 9வது பாகமும் ( Fast and Furious 9) தயாராகி விட்டது. ஆக்சன் திரில்லர் படமான பாஸ்ட் அன்ட் பியூரிஸ் 9ம் பாகம் மே 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வின் டீசல் (Vin Diesel), மைக்கேல் ரோட்ரிகெஸ் (Michelle Rodriguez), டைரஜி ஜிப்சான் (Tyrese Gibson), செரிஸ் லுடாக்ரிஸ் பிரிட்ஜஸ், ஜான் சீனா, ஜோர்ட்னா பிரேவ்ஸ்டர், நாதலியே இமானுவேல், ஹெலன் மெரின் மற்றும் ஹார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் லெனின் இயக்கி உள்ளார். டான் கேஷே கதையை எழுதி உள்ளார். கேரி ஸ்க்ட் தோம்ப்சன் கேரக்டர்களை உருவாக்கி உள்ளார். இந்த படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் சார்பில் Neal H. Moritz, Vin Diesel உள்பட 7 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாஸ்ட் அன்ட் பியூரிஸ் 9ம் பாகத்தின் டிரெய்லர் ஜனவரி 31ம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செம்ம திரல்லான சேஷிங் காட்சிகள், ஆக்சன் காட்சிகள், மிரட்டும பின்னணி இசை பிரம்மிப்பை உருவாக்குகிறது.
அதிலும் டிரெய்லரில் கார் ஆற்றை கடக்கும் அந்த ஒரு காட்சி நிச்சயம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும். கேமரா காட்சிகளும் , கிராபிக்ஸ் கட்சிகளும் வடிவமைக்கப்பட்ட விதத்தை பார்க்கும் போது நம்மூரில் இது போன்ற படம் வர இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ என்ற ஏக்க பெருமூச்சு விட வைக்கிறது.
Fast and Furious 9 இந்த கோடை விடுமுறையில் கண்டுகளிக்க வேண்டிய முக்கியமான படமாகும். செம்ம எண்டர்டெய்ண்மெண்ட் மற்றும் ஆக்சனை விரும்புவோருக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பலாம்.
