Connect with us

Cinemapettai

chandrababu-naidu

Politics | அரசியல்

தங்க இடமில்லாமல் தவிக்கும் சந்திரபாபு நாயுடு.. நாங்கள் வீடு தருகிறோம் என கிளம்பிய கிராம மக்கள்

சந்திரபாபு நாயுடு 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். இதனையடுத்து மக்களை நேருக்கு நேராக சந்திப்பதற்கு கிருஷ்ணா நதியோரம் ‘பிரஜா வேதிகா’ என்ற கட்டிடத்தை நிறுவினார்.

அதன் அருகிலேயே இவரின் பங்களாவும் இருந்தது, இந்த இரண்டு மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 28 கட்டிடங்கள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக தற்போதைய  முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதனை இடிப்பதற்கு கட்டளையிட்டார்.

பிரஜா வேதிகா தரைமட்டமாக இடிக்கப்பட்டது, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கட்சியினர் முக்கியமான மாவட்டங்களில் வாடகைக்கு வீடு தேடி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க சந்திரபாபு  நாயுடுவை அந்நாட்டு விவசாயிகள் சந்தித்து நீங்கள் தங்குவதற்கு நாங்கள் இடம் தருகிறோம், அதுமட்டுமல்லாமல் அங்கேயே வீடும் கட்டித் தருகிறோம் என்று கூறியிருப்பது அவர்களின் பெருந்தன்மை  காட்டுகிறது.

தலைநகரில் உள்ள எந்த கிராமத்தில் உங்களுக்கு வீடு வேண்டும் என்பதை மட்டும் கூறுங்கள், நாங்கள் எங்களது நிதியைக் கொண்டு வீடு கட்டித் தருகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். இது சந்திரபாபு நாயுடு பெரும் ஆறுதலாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top