Connect with us
Cinemapettai

Cinemapettai

மூன்று மகள்களுடன் தற்கொலை செய்வோம்.. மோடிக்கு கடிதம் எழுதிய விவசாயி.. ஏன் தெரியுமா?

Modi-farmers

India | இந்தியா

மூன்று மகள்களுடன் தற்கொலை செய்வோம்.. மோடிக்கு கடிதம் எழுதிய விவசாயி.. ஏன் தெரியுமா?

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது தண்ணீர் வறட்சி அதிகரித்துள்ளது. ஆனால் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதற்கு மக்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் விவசாயி ஒருவர் நரேந்திரமோடிக்கு தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

தற்போது இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரபால் சீங் குடிநீர் பிரச்சனையால் கிணறுகளில் உள்ள போர்வெல் தண்ணீரை பயன்படுத்துவதாகவும் அது மிகுந்த உவர்ப்புத்தன்மை உள்ளதாகவும் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கால்நடைகள் கூட அந்த உவர்ப்பு தண்ணீரை குடிக்க மறுப்பதாகவும் விவசாயத்திற்கு அந்த நீரை செலுத்தினால் பயிர்கள் கருகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த விவசாயி தன்னுடைய மூன்று மகள்களுடன் தற்கொலை செய்யப் போவதாகவும் அதற்கு நரேந்திர மோடி அனுமதிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு குடி தண்ணீர் குடிக்க ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top