India | இந்தியா
பைக்கில் வந்த விவசாயிகளுக்கு வழிவிட்ட சிங்கங்கள்.. திகைக்க வைக்கும் வீடியோ
Published on
பைக்கில் வந்த விவசாயிகளுக்கு சிங்க கூட்டங்கள் வழிவிட்ட காட்சி பார்ப்போரை திகைக்க வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் வசிக்கின்றன. இந்தியாவில் வேறு எங்குமே சிங்கங்கள் கிடையாது. அங்குள்ள சிங்கங்கள் அரசு பொக்கிசமாக பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் அம்ரேலி மாவட்டத்தில் கோதியானா பகுதியில் (கிர் காடுகள் பகுதி) சிங்கங்கள் சுதந்திரமாக குட்டிகளோடு உலாவிக்கொண்டிருந்தன.
அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கத்தின் அருகே தெரியாமல் வந்துவிட்டனர்.
அப்போது சிங்கங்கள் அவர்கள ஒன்றும் செய்யாமல் வழிவிட்டு ஒதுங்கி வேறுபாதையில் சென்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஜார்க்கண்ட் எம்பி பரிமல் நத்வான் வெளியிட்டுள்ளார்.
