fbpx
Connect with us

Cinemapettai

அக்மார்க் பாண்டஸி திரில்லர் பஞ்சராக்ஷரம் திரைவிமர்சனம்.. 

Reviews | விமர்சனங்கள்

அக்மார்க் பாண்டஸி திரில்லர் பஞ்சராக்ஷரம் திரைவிமர்சனம்.. 

வித்யாசமான தலைப்பு, அறிமுக இயக்குனர், புதிய டீம், இளம் நடிகர் நடிகைகள். இவர்களுடன் கதையில் பாண்டஸி, சைக்கலாஜிக்கல் அம்சங்கள் கலந்து எடுக்கப்பட்டுள்ள படமே பஞ்சராக்ஷரம்.

பஞ்சராக்ஷரம் என்றால்… நமசிவாய… என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். இப்படத்தில் ஐந்து மெயின் ரோல்கள், அவர்களின் குணாதிசயம் பஞ்சபூதங்களுடன் ஒப்பிட்டு சித்தரித்துள்ளார் இயக்குனர் பாலாஜி வைரமுத்து. குறும்பட வட்டாரத்தில் பிரசித்தி ஆனவர்

கதை – அடுத்து நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பஞ்சராக்ஷரம் என்ற புக்கில் படித்து நாம் தெரிந்துகொள்ள முடியும், என்ற முன்னுரையுடன் ஆரம்பம் ஆகிறது படம்.

இசை கலைஞர், ரேஸர், ட்ராவல் செய்பவர், எழுத்தாளர், பொது சேவை செய்பவர் என வெவ்வேறு குணாதிசய பின்னணியில் உள்ள இந்த ஐந்து நபர்கள் சந்திக்கிறார்கள். ஒன்றாக ட்ரிப் செல்ல திட்டமும் இடுகிறார்கள். அங்கு ஒரு புக்கை வைத்து  விளையாட்டை விளையாட, நிஜ வாழ்க்கையில் எவ்வாறு அது நிஜமாகிறது என்பதுடன் வருகிறது இடைவேளை.

நான்கு நபர்கள் சந்திக்க, காணாமல் போகும் ஒருவரை தேடி செல்கின்றனர். அந்த புக் எங்கிருந்து கிடைத்தது, அதன் மகிமை என்ன என தெரியவர, அதில் இருக்கும் குறிப்புகளை வைத்து முன்னேறுகின்றனர்.

இவர்களுக்குள் இருக்கும் ரகசியம், காணாமல் சென்றவளின் நிலை என்ன, கடத்தியது யார், அவன் நோக்கம் என்ன என்பதனையே சஸ்பென்ஸ் கலந்து சொல்லியுள்ளனர்.

பிளஸ் – கதை, திரைக்கதை, இயக்குனர் மற்றும் டெக்கினிக்கல் டீம்.

மைனஸ் – சில இடங்களில் லாஜிக் மீறல், எளிதில் ஊகித்துவிடக்கூடிய கிளைமாக்ஸ்

சினிமாபேட்டை அலசல் – அனுபவம் வாய்ந்த இயக்குனரே எடுக்கத் தயங்கும் ஜானர். ஆனால் அதனை சூப்பர் ஆக கையாண்டுள்ளனர் படக்குழு. இயக்குனர் பாலாஜி மற்றும் ஒளிப்பதிவாளர் யுவாவிற்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – சினிமா ரசிகர்கள், ஹாலிவுட் பட விரும்பிகள், மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸ் தான் இவர்களின் டார்கெட். ஏ மற்றும் பி சென்டரில் இப்படம் கட்டாயம் ஹிட் அடிக்கும். நம்மையும் ஸ்க்ரீனுக்குள் இழுத்து சென்று ஒரு பதைபதைப்பை நம்முள் விதைத்து விடுகின்றனர்.

இன்னும் கொஞ்சம் மார்க்கெட்டிங், பெரிய நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் இப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும். எனினும் இன்னும் வரும் நாட்களில் படத்தின் ஷோ எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

INDIANA JONES படத்தை பார்த்தது போல ஒரு சாகச அனுபவத்தை இப்படம் நமக்கு தருகிறது.

சினிமாபேட்டை வருத்தம் – காசி டாக்கீஸ் போன்ற பிரபல திரையரங்களில், காலை காட்சி கூட்டம் இல்லாத காரணத்தால் ரத்து செய்தனர். தமிழ் சினிமா போற்றி பாராட்ட பட வேண்டிய இப்படம், இது போல் ஆனது மிகுந்த வருத்தமே எங்களுக்கு.

(பி கு – வாழ்த்துக்கள் டீம், உங்கள் அடுத்த பட பூஜை சமயத்தில் கூப்பிடுங்க, நாங்க பன்றோம் பாஸ் பிரீ மார்க்கெட்டிங்)

சினிமாபேட்டை ரேட்டிங் 3.75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top