Fantastic-Beasts-The-Crimes-of-Grindelwald-Trailer-Johnny-Depp

FANTASTIC BEASTS 2 The Crimes of Grindelwald

ஜே.கே ரௌலிங் கற்பனையில் உருவானது தான் பான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் சீரிஸ். எழுதியது மட்டுமன்றி இணைந்து தயாரித்துள்ளார். இந்த படம் ஹாரிபார்ட்டருக்கு 70 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. 2016 இல் முதல் பாகம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் , அதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது . எட்டி ரெட்மைனி ஹீரோவாக, ஜானி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய டேவிட் யேட்ஸ் இயக்கியுள்ளார்.

கதை

விட்ட அதே இடத்தில் இருந்தே இப்படம் தொடங்குகிறது. மாஜிஸியன்ஸ் காங்கிரெஸ்ஸால் கைது செய்யப்பட்ட க்ரேண்டல்வாட் , சிறை மாற்றம் செய்யும் பொழுது தப்பித்து விடுகிறார்.

Fantastic Beasts

பிற நகரங்களுக்கு சில நம் ஹீரோவுக்கு தடை போட்டது காங்கிரஸ். இந்த பகுதியில் அவரை அழைத்து, க்ரேண்டல்வாட் செய்யும் சதியை முறியடிக்கும் பொறுப்பை கொடுக்கிறார்கள். கிரெடேன்ஸ் என்பவனை தான் க்ரேண்டல்வாட் சந்திக்க முற்பட அவனே முன்னரே கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஹீரோ. பாரிசில் டம்பெல்டோர் தனது மாணவன் நியூட் சந்தித்து நீ தான் இதனை செய்ய முடியும் என ஊக்கமும் தருகிறார். நம் ஹீரோ சந்திக்கும் பிரச்சனைகள், தன் காதலின் டினாவுடன் ஏற்படும் சிறு மோதல் பின் புரிதல். நியூட் மற்றும் அவர் சகோதரன் தேசுஸ் இடையாயான உறவு. ஒரு தலையாக காதலித்த லெஸ்ட்ராங்க அவளின் செயல். நட்பு வட்டத்தில் இருந்த குயினி கட்சி மாறுவது மற்றும் மேஜிக் என விறு விறுப்பாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. விசார்ட் மற்றும் மக்கள் உலகம் இரண்டையும் ஆட்சி செய்ய தனக்காக ஆதரவை பெருக்குகிறான் வில்லன். அதில் அவன் வெற்றி கண்டானா, கிரெடேன்ஸ் என்பவன் யார், அவனின் நோக்கம் என்பதுடன் இந்த பார்ட் முடிகிறது.

அதிகம் படித்தவை:  சங்கிலி புங்கிலி கதவ தொற தெரிக்கவிட்ட முதல் நாள் வசூல் எவ்ளோ.?

பிளஸ்

ப்ராம்மணட செட், கிராபிக்ஸ் காட்சிகள், நடிப்பு, வசங்கள், பின்னணி இசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்

அதிகம் படித்தவை:  பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.

மைனஸ்

அதீத பில்ட் அப், அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள், சரியாக பயன்படுத்தாத ஜானி டெப்.

மூன்று பகுதிகளாக படத்தை எடுப்பதாக அறிவித்தார் இயக்குனர் முதலில், எனினும் ரௌலிங் ஐந்து பார்ட் சீரிஸ் என்று மாற்றினார். அதனால் அதிக கதாபாத்திரங்கள், போதுமான கதையோட்டம் இந்த பார்ட்டில் இல்லை என்றே தோன்றுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

ஹாரி பாட்டர் பட சீரிஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் இப்படம். பாட்டர்படங்களில் அதிகம் பேசப்படும் இரண்டு ஜாமாபாவங்கள் பற்றிய வரலாறு அவர்களுக்கு இந்த் சீரிஸின் மீது ஆர்வத்தை தூண்டும். எனினும் சாமானிய ரசிகன், வாபா ஒரு ஹாலிவுட் படம் போலாம் என விசார்ட் உலகம் பற்றி தெரியாதவர்களுக்கு படம் சிறிய ஏமாற்றத்தை மற்றும் குழப்பத்தையே படம் தரும்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 .25 / 5