ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிய பாகுபலி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படம் உருவாக கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆனது. பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தாலும் அனுஷ்கா பிரபாஸுக்கு அழகனா பொருத்தமாக காணப்பட்டார். இதற்கு அவர்களது நடிப்பும் ஒரு காரணம்.
பாகுபலி படப்பிடிப்பின் போது பிரபாஸ் அனுஷ்கா இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் பழகியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்தாலே தெரியும்.
மேலும், இருவரும் இணைந்து முன்னதாகவே சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளனர். இருவரை பற்றியும் சில வதந்திகளும் வந்தன.
இதனைத் தொடர்ந்து பிரபாஸ், அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுவும் நல்ல தான் இருக்கு, பிரபாஸும் அனுஷ்காவும் இதை பற்றி யோசிக்கலாம் போல…