Tamil Cinema News | சினிமா செய்திகள்
டுவிட்டரில் விராட்டிடம் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.. என்னவா இருக்கும்?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம், மனைவி அனுஷ்காவை விரைவில் விவாகரத்து செய்யுங்கள் என புது கோரிக்கையை டுவிட்டரில் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் ஆக்ரோஷமான வீரராக இருப்பவர் விராட் கோலி. களத்தில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் விராட் கோபத்தை வைத்து கொள்ளாமல் அப்படியே வெளிக்காட்டுபவர். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை சில வருடங்களாக காதலித்து வந்தார்.
இருவரும் வெளியிடங்களுக்கு சென்றாலும், புகைப்படங்கள் வெளியானாலும் கம்முனு இருங்கப்பா காதலெல்லாம் இல்லை என அசால்ட்டாக்க சொல்லி விட்டு நகர்ந்து விடுவார். அனுஷ்கா சர்மா நேரில் சென்று காணும் கிரிக்கெட் போட்டிகளில் சில இந்தியாவிற்கு தோல்வியாக முடியும். இதனால், அனுஷ்கா விராட்டிற்கு லக்கி இல்லை. மைதானத்திற்கு வராதீர்கள் என கோரிக்கை வலுவாக எழுந்தது. இது தற்போது இல்லை. இருவரும் காதலித்து இருந்த சமயத்திலேயே இந்திய அணி தோல்விக்கு அனுஷ்காவையே காரணமாக கூறினர். விராட்டும் அதற்கு நெட்டிசன்களை கடுமையாக சாடினார்.
இதே கோரிக்கை மீண்டும் வலு பெற்றுள்ளது. ஐபில் போட்டிகளின் நடப்பு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. இதனால், மைதானத்திற்கு அனுஷ்கா வரக்கூடாது என கோரிக்கை வலுவாக எழும்பியது. நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வெற்றி பெறுவோம் என பெங்களூர் மற்றும் விராட் ரசிகர்கள் டூவிட்டை தட்டினர். இருந்தும், அனுஷ்கா அதை பொருட்படுத்தாமல் எல்லா போட்டிகளிலும் முதல் ஆளாக கலந்து கொண்டு விடுகிறார்.
இந்நிலையில், ஒரு படி மேலேறிய ரசிகர்கள் அனுஷ்காவை விவாகரத்து செய்யுங்கள் என பதிவிட தொடங்கி இருக்கின்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு இணையவாசிகள் இதெல்லாம் ஓவரா இல்லையா? ஒரு போட்டிக்கு மனைவியை விட்டு விலக சொல்வது மோசமான செயல் என அனுஷ்காவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காதலிக்காகவே கடுமையாக ரசிகர்களை சாடிய விராட் கோலி, மனைவிக்காக எந்தவிதமாக ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
