சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எக்கோவ்.. லோகி மட்டும் வேண்டாம், நயன்தாராவை எச்சரிக்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா சமீபத்தில் கைநிறைய பிரேஸ்லெட்டுகளுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருக்குமோ என்ற சந்தேகத்துக்குள் வந்துவிட்டனர்.

வழக்கமாக இப்படி கைநிறைய பிரேஸ்லெட் போடும் பழக்கம் நயன்தாராவுக்கு இல்லை. ஒரு வேளை லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை தான் இப்படி குறியீடு மூலமாக தெரிவிக்கிறார்களோ என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நயன்தாராவை எச்சரிக்கும் ரசிகர்கள்

ரஜினிக்கு ராசியான நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அதனால் அவர் கூலி படத்தில் நடித்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் நயன்தாரா ரசிகர்களோ பயத்தில் அவரை எச்சரிக்கிறார்கள். பொதுவாக இவர்கள் காம்போ நன்றாக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் தனது ஹீரோயின்களை என்ன செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும்.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வார். கூலி படத்தில் தனக்கு மிகவும் பிடித்த கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியை நடிக்க வைத்திருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்த நண்பி என்பதால் அவர் மீது கைவைக்க மாட்டார். அப்படி ஒருவேலை நயன்தாரா நடித்தால், அவர் தலையை வெட்டி முண்டமாக நடக்க விட்டுவிடுவார்.

எங்களால் உங்களின் கொலை காட்சியை பார்க்க முடியாது. அதனால் லோகேஷ் கனகராஜை நம்பாதீங்க. அவரை நம்பி கூலி படத்தில் நடித்தால் தலையை வெட்டிக் கொல்லும் காட்சியை கூட வைப்பார். அதனால், “எக்கோவ்.. லோகி மட்டும் வேண்டாம்…” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News