புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியனை ரசிகர்கள் சூதானமாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். பிரேமம் படம் மூலம் நடிகையானவர் மடோனா செபாஸ்டியன். அவர் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வரும் மடோனாவுக்கு புதிய தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய பட வாய்ப்பு குறித்து அறிந்த மடோனாவின் ரசிகர்கள் ட்விட்டரில் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

நீங்கள் எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளீர்களோ அவர் ஒரு மார்க்கமானவர், அதனால் அவரிடம் இருந்து தள்ளியே இருங்கள். அது தான் உங்களுக்கு நல்லது என ரசிகர்கள் ட்வீட்டியுள்ளனர். உங்களின் நல்லதுக்கு தான் சொல்கிறோம், பார்த்து நடந்து கொள்ளுங்கள் எனவும் ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.