fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்திய டீம்மை கலாய்க்க முயன்று, ரசிகர்களிடம் வசமாய் சிக்கிய வாகன்

Sports | விளையாட்டு

இந்திய டீம்மை கலாய்க்க முயன்று, ரசிகர்களிடம் வசமாய் சிக்கிய வாகன்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்தோம். ஒரு நாள், டி 20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் அதிக பரபரப்பாக சென்றது. பல முன்னணி வீரர்கள் இல்லாமல், ரஹானே தலைமயில் கோப்பையை வென்றது சூப்பர் தான். எனினும் அந்த தொடரின் ஜோர் அடங்குவதுக்கு முன்னதாக அடுத்த தொடர் இங்கிலாந்துடன் துவங்கிவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருப்பதன் காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்று நோக்கும் சீரிஸ் இது. இங்கிலாந்து டீம் இலங்கை மண்ணில் ஒரு கலக்கு கலக்கிய பின் தான் இங்கு வந்துள்ளனர்.

முதல் டெஸ்ட் சென்னையில், கேப்டன் ரூட்டின் 100 வது, மற்றும் பட்லரின் 50 வது டெஸ்ட் போட்டி இது. டாஸ் வென்ற இங்கிலாந்து டீம் மாரத்தான் முதல் இன்னிங்ஸ் ஆடினர். போட்டி இந்தியா கையை விட்டு நழுவியது. ஜோ ரூட் டபிள் செஞ்சுரி அடித்து அசத்தினார்.

joe root

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அந்தப் போட்டியில் தன்னுடைய 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அவருக்கு நினைவு பொருளாக இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்தனர்.

இதனை தான் மைக்கல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காபாவில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்பு நாதன் லயனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை 100-ஆவது டெஸ்டுக்காக பரிசளித்தனர். அதே போன்று ஜோ ரூட்டுக்கும் தோல்விக்கு பின்பு ஜெர்சியை பரிசளித்திருக்கிறார்களா? இதுபோல எதாவது நிகழ்ந்ததா ? யாராவது அதனை உறுதிப்படுத்த முடியுமா? என கிண்டலாய் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தான் இந்திய ரசிகர்கள் ” மேட்ச் வெற்றியே கொடுத்தாச்சு, ஜெர்சி வேண்டுமா? முதல் போட்டியில்தான் தோற்று இருக்கிறோம், தொடரை வென்ற பின்பு இந்தியா ஜோ ரூட்டுக்கு பரிசளிக்கும். பரிசு நாங்களாக கொடுக்க வேண்டும், இப்படி கேட்டு வாங்க கூடாது. நான்காவது டெஸ்ட் முடியட்டும், தருவோம்.” என்றெல்லாம் பதில் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top