தயவு செய்து அவரை கன்கஷன் விதி மூலம் வெளியேற்றுங்கள்.. ரசிகர்களை வெறுப்பேற்றிய சின்னதம்பி!

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் விராத் கோலி, புஜாரா, ரகானே மற்றும் ஓரளவு தாக்குப்பிடித்து இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவி செய்தனர்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 233 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி, மேற்கொண்டு 11 ரன்கள் சேர்ப்பதற்ககுள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்நிலையில் பல சர்ச்சைகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் ப்ரித்வி ஷா மற்றும் விருத்திமான் சஹா இடம்பெற்றனர். ப்ரித்வி ஷா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போதே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அவர் ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு இருந்தார்.அவருக்கு பதிலாக கே எல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் இருவருள் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென விமர்சனங்கள் கூறிவந்தனர்.

அதற்கு ஏற்றார்போல் முதல் இன்னிங்சில் ப்ரித்வி ஷா டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்சிலும் 4 ரன்களுக்கு வெளியேறினார். இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பை பறிகொடுத்தார், பீல்டிங்கிலும் சொதப்பினார்.

இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போதும் மோசமாக செயல்பட்டார். மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்த போது அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டார்.இது ரசிகர்களிடையே வெறுப்படையச் செய்தது.

சில ரசிகர்கள் ப்ரித்வி ஷாவுக்கு தலையில் அடிபட்டது எனக் கூறி அவருக்கு பதில் இந்த டெஸ்டில் வேறு வீரரை கன்கஷன் முறைப்படி ஆட வையுங்கள் எனக்கூறி கலாய்த்தனர்.

Prithiv-cinemapettai.jpg
Prithiv-cinemapettai.jpg