Sports | விளையாட்டு
சந்தானம் இப்படி செய்வார் என எதிர்பார்க்கல.. வருத்தத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர்கள் பலர் இருக்கின்றனர்.
அதேபோல் காமெடி நடிகராக இருந்து பின்னால் ஹீரோவாக தற்கால சினிமாவில் மாறி வருகின்றனர்.
அதற்கு அச்சாரம் போட்ட சந்தானத்தை தொடர்ந்து தற்போது சூரி, யோகிபாபு ஆகியோர் தொடர்ந்து சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகின்றனர்.
இதில் சந்தானம் மட்டும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் டிக்கிலோனா.
சந்தானம் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்தது.
ஆனால் தற்போது டிக்கிலோனா படத்துக்கு டப்பிங் செய்ய மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம்.
அதற்கு காரணம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் மற்றும் பிஸ்கட் போன்ற படங்கள் OTT தளங்களில் வெளியாக ரெடியாகி விட்டது.
தற்போது டிக்கிலோனா படத்தையும் முடித்து விட்டால் நேரடியாக OTT தளத்திற்கு கொடுத்து விடுவார்கள் என டப்பிங் செய்யாமல் இழுத்தடிக்கிறாராம்.
இதனால் சந்தானம் இது தயாரிப்பு தரப்பு மிகவும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காசு கொடுத்தும் சந்தானம் எப்படி செய்வது சரியில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

santhanam
