ஒரே காட்சியில் அஜித்தை வம்புக்கு இழுத்த நெல்சன்.. எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றிய பீஸ்ட் படம்

நேற்று பீஸ்ட் திரைப்படம் வெளியானது முதலே படத்தைப் பற்றிய பலவிதமான கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி கொண்டிருக்கிறது.

அதில் தற்போது ஒரு புதிய சர்ச்சையை இயக்குனர் நெல்சன் சோசியல் மீடியாவில் கிளப்பியுள்ளார். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் தீவிரவாதி ஒருவனை விஜய் கட்டி இழுத்துக் கொண்டு வருவார்.

அதைப் பார்த்த விடிவி கணேஷ் என்ன இது மனுஷனை இழுத்து விட்டு வர சொன்னா ஒரு ஆமையை கட்டி இழுத்து வரானே என்று கூறுவார். இந்த வசனமும், காட்சியும் தான் தற்போது இணையதளத்தில் அஜித் ரசிகர்களுக்குள் ஒரு புகைச்சலை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியும் சண்டையுமாக இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் அவர்களுடைய ரசிகர்களோ யாருக்கு முதலிடம் என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல நெல்சன் படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார். இதுதான் தற்போது இணையத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் அனைவரும் இதை வைத்து தங்களுக்குள் கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வலிமை திரைப்படம் வெளியானபோது அவர்களுக்கு ஏகப்பட்ட சண்டை ஏற்பட்டது. இதில் தற்போது தேவை இல்லாமல் இப்படி ஒரு காட்சியை வைத்து நெல்சன் நன்றாக பத்த வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்