DNA டெஸ்ட் கூட எடுக்க தெரியாத பாரதி டாக்டர்க்கு டைவர்ஸ் ஒரு கேடா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் வித்தியாசமான கதையை கொண்டு பார்வையாளர்களை கவர்ந்த நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இதில் கருப்பு நிற கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சீரியல் ஒளிபரப்பான சில நாட்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பாரதிகண்ணம்மா சீரியலில், வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பரீனா கதையை வேற லெவலில்  எடுத்து சென்றனர். வெண்பா கூறும் அனைத்து கட்டுக்கதைகளையும் நம்பி மனைவி மீது பாரதிக்கு சந்தேகம் எழுகிறது.

கணவன், மனைவிக்கு இடையே சந்தேகம் வந்தால் இல்லற வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது பாரதி கண்ணம்மா நெடுந்தொடர். கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று பாரதியின் சந்தேகம் முத்தி போனது. அதிலும் பாரதியின் கதாபாத்திரமோ ஒரு டாக்டர்.

இது போன்ற சந்தேகம் வந்த உடனே டாக்டர் பாரதி, டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் பல வருடகாலமாக கண்ணம்மாவை துன்புறுத்தி வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கதாநாயகன் பாரதியை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும், வெண்பா செய்யும் சித்து விளையாட்டு தான் இவை அனைத்தும் என்பது நன்றாகவே தெரியும்.

பாரதி தொடர்ந்து வில்லி வெண்பாவின் பேச்சைக் கேட்டு நடப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெண்பாவின் வில்லத்தனம் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் இடையே விரிசல் இருந்தாலும் இவர்கள் சட்டத்தால் பிரியவில்லை என்பதை பாரதியிடம் கூறுகிறார் வெண்பா.

மேலும் பாரதியை கண்ணம்மாவிடமிருந்து விவாகரத்து பெறும் படி வலியுறுத்துகிறார். வெண்பாவின் பேச்சை நம்பி பாரதி, கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்பது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்