Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைத்தியக்கார பு*** என ஹிப்ஹாப் தமிழாவை திட்டிய ரசிகர்கள்.. எதை வச்சு பந்தா பண்றதுன்னு விவஸ்தை வேண்டாமா ஆதி
உலகமே கொரானா வைரஸ் பற்றி கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் அதனை கிண்டல் செய்த ஹிப்ஹாப் ஆதியை ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர். மிகக் குறுகிய காலத்தில் ஓரளவு பெயர் சொல்லும் இசையமைப்பாளராக வளர்ந்தவர் ஆதி.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி மூன்று படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களுமே ஓரளவு வெற்றியை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்ற ஆதி கொரானா வைரஸ் பற்றி கிண்டல் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, அதிக காற்றில் உள்ள பகுதிகளில் இந்த மாதிரி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது முகமூடி அணிந்து செல்வது நமக்கு கொரானா வைரஸ் தாக்கிவிட்டது என்பதை குறிப்பிட்டு காட்டுவதாகவும், நம்மிடம் நிலவேம்பு இருக்கும் வரை எந்த நோயும் உடலைத் தாக்காது எனவும் கிண்டலாக கூறியுள்ளார்.

hiphop-adhi-tweet
இதனை சிலர் விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் பலரிடையே இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு சில சாம்பிள்கள் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியை ரசிகர்கள் கண்டபடி அர்ச்சனை பண்ணியது.

fans-tweet
பந்தா பண்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா என பல ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. உங்களுக்கு எதுக்கு சார் இந்த வேலை!
