Connect with us
Cinemapettai

Cinemapettai

dd-vijay-tv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதனால் தான் புருஷன் விட்டுட்டு போனாரு, இன்னும் திருந்தலையா.. டிடியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி பின்னர் காலப்போக்கில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது வரை நம்பர் ஒன் ஆக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தனது நண்பரை காதல் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த சில வருடங்களிலேயே அவரை விட்டு பிரிந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

அவரது நண்பரும் முன்னாள் கணவருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவர் திவ்யதர்ஷினி உடன் எதற்காக விவாகரத்து ஆனது என்பதை பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் திருமணத்திற்கு பிறகு டிடி பல ஆண் நண்பர்களின் சகவாசம் வைத்துக் கொண்டதாகவும் இரவு நேரங்களில் குடி கூத்து என அவர்களுடன் நேரத்தை செலவழித்து வந்ததாகவும் கூறினார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் குட்டையான உடையணிந்து கொண்டு ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகியது தனக்கு பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

திவ்யதர்ஷினி, அவர் மேலான குற்றச்சாட்டை அடுக்கினார். தன்னை நம்பாமல் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபகாலமாக டிடி நடிகைகளைப் போல் மிகக் குறைந்த அளவு உடை அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இதன் காரணமாகத்தான் உங்களுடைய கணவர் உங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார் எனவும் இன்னும் திருந்தாமல் இப்படியே இருந்தால் எப்படி எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

dd-cinemapettai

dd-cinemapettai

Continue Reading
To Top