இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு விருப்பம் உள்ளதாம்.

விஜய் சில காலமாக நன்றாக ஓடிய துப்பாக்கி, கத்தி படத்திற்கு கூட வெள்ளிவிழா நிகழ்ச்சி வைக்கவில்லை, இந்த வருடம் கூட இவரின் தெறி மெகா ஹிட் ஆனது.

இந்த படத்திற்கு வெள்ளிவிழா வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர், தாணுவும் கபாலி ரிலிஸிற்கு பிறகு இதற்கான ஏற்பாடுகளை செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.