Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் படத்திற்காக கமலஹாசனிடம் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.. தீவிர ஆலோசனையில் லோகேஷ் கனகராஜ்!
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று கமல் பிறந்த நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
எனவே இந்த மிரட்டலான டைட்டில் அடங்கிய டீசர் ஆனது நார்கோஸ் சீரியலின் காப்பி என சொல்லப்பட்டாலும், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதேபோல் சினிமா பிரபலங்கள் பலரும் உலக நாயகன் கமலஹாசனுக்கும் விக்ரம் பட குழுவிற்கும் சமூக வலை தளங்களின் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் தரப்பிலிருந்து விக்ரம் படத்தில் கமலஹாசன் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் தரப்பில் இருந்து உலக நாயகன் கமலஹாசனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து வருவதாகவும் தெரிகிறது.

kamal-vikram-movie-cinemapettai
மேலும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்தால் விக்ரம் படம் வேற லெவல் ஹிட் கொடுக்கும் என்ற ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா? என்ற பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
