நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இது வரையில் 70 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில்  திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்று விவேகம் படத்தின் டீசரை ரசிகர்களுக்கு இலவசமாக நேரலையில் காட்ட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் ஏராளமான அஜித் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். விவேகம் டீசர் வெளியான சமயத்தில் ஆர்வ கோளாறு காரணமாக சில ரசிகர்கள் திரையரங்கு சில்வர் ஸ்கீரினில் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

இதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஸ்கீரின் சேதமடைந்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்கு நிர்வாகத்திற்கு நடிகர் அஜித் சார்பில் நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.