தனுஷுக்கும் பாடகி சுசித்திராவுக்கும் என்ன ஆச்சு என்று கோலிவுட் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தன் கணவர் கார்த்திக்கை சுசித்திரா விவாகரத்து செய்யப்போவதாகவும், அதை தனுஷ் ஆட்கள் கிண்டல் செய்துகொள்ளலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன் நள்ளிரவில் சுசித்திரா தொடர்ந்து ட்வீட் செய்துகொண்டே இருந்தார். தனுஷும் அவர் க்ரூப்பும் எதோ விளையாண்டதாகவும், அதனால் தன் கையில் காயம் பட்டதாகவும் ஸ்டில் எடுத்து போட்டு, தனுஷ் நீ பார்த்துக்கொண்டே இருந்தாய், உன் ஆட்கள் செய்ததை பார். சிம்பு நீயுமா? என்று ஒரு ட்வீட்டை போட்டு இருந்தார்.

அத்தோடு,  தன் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப்போவதாக சொல்லி, இது அதிகாரப்பூர்வமானது என்று ட்வீட் செய்துவிட்டு,’தனுஷ், நான் விவாகரத்து வாங்கப்போறேன்.உங்க கேங்கை வைத்து என்னை கலாய்க்க வேண்டியது தானே. அவுங்க எல்லாம் முட்டாள். ரொம்ப போர் அடிக்கிது” என்று ட்வீட் போட்டிருந்தார்.

அவ்வளவு தான், ஏற்கனவே கோலிவுட்டில் யார் விவாகரத்து பெற்றாலும், அதில் தனுஷின் பங்கு இருக்கும்ன்னு பேச்சு. இதில் இப்படி ட்வீட் வந்தவுடன், நெட்டிசன்கள்,’மஹா பிரபு, இங்கேயும் வந்துட்டிங்களான்னு” மீம்ஸ் போட்டு தனுஷை கிண்டல் செய்துள்ளனர்.

https://twitter.com/suchitrakarthik/status/833622729370767360

https://twitter.com/suchitrakarthik/status/833611755196645376