நடராஜன் பதிவிட்ட ஒரு போட்டோ! அடுத்த போட்டியில் ஆடும் 11 வீரர்கள் இவர்கள் தான்

இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருப்பது நாம் அறிந்த விஷயமே. ஒரு நாள் தொடரை தோற்ற பின்பு டி 20 தொடரை வென்றனர். தற்பொழுது இரண்டு டீம்களும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த ஆஸ்திரேலிய தொடரில் எதனை மறந்தாலும், பல வருடங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விடுவார். நெட் பௌளராக டீம்மில் சேர்க்கப்பட்ட இவர் அதன் பின்னர் வருண் மற்றும் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான டீம்மில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அழகாக பயன் படுத்தி வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டையும், ஆதரவையும் பெற்றுள்ளார். யார்கர் மட்டுமல்ல ஸ்லோ பால், கட்டர், பௌன்சர் என அசத்திவிட்டார் மனிதர்.

ஏற்கனவே ஷமி காயம் காரணமாக விலகினார். தற்பொழுது உமேஷுக்கும் காயம் ஏற்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு மாற்றாக சைனி, தாகூர் அல்லது நடராஜனில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும், அது யாராக இருக்கும் என பலரும் யோசித்து வந்தனர்.

இந்நிலையில் நிறம் மாறினாலும் நோக்கம் ஒன்று தான் என இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டுள்ளார்.

t natarajan

மேலும் ட்விட்டரில், “வெள்ளை ஜெர்சி அணிவது பெருமையாக உள்ளது, அடுத்த சாவல்களுக்கு தயார்.” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். எனவே இந்த இரண்டும் இவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார் என்பதனை நமக்கு உறுதி செய்துள்ளது.

ரோஹித்துக்கு துணை கேப்டன் கொடுத்ததனால், ஒபெனிங்கில் தடுமாறும் அகர்வாலுக்கு பதில் அவர் இடம் பெறுவார். விஹாரிக்கு பதில் ராகுல் வர வாய்ப்பு இருப்பதாக பல ஆலோசகர்கள் சொல்லிய நிலையில், வலை பயற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே கிட்டத்தட்ட ஆடும் 11 இதுவாக தான் இருக்கும்.

உத்தேச 11 – கில், ரோஹித், புஜாரா, ரஹானே, விஹாரி, ஜடேஜா, பண்ட், அஸ்வின், சிராஜ், பும்ரா, நடராஜன். (12 வது வீரர்) சைனி