Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீ படத்தில் எத்தனை விஜய் தானுங்க.. ஜாக்பாட் கேள்வி, அலசல் பார்வை
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ட்ரைலர் வெளியாகி சாதனை மேல் சாதனை படித்து வருகிறது.
அது என்னவோ அட்லீ தன் அண்ணன் விஜய்க்கு கதாபாத்திரம் எழுதும் பொழுது மிகவும் ரசித்து எழுதிவிடுவார் போல. சிங்கில் விஜய் தானா அல்லது மல்டிபில் விஜய்களா என படம் பார்க்கும் வரை ரசிகனால் எதுவுமே கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
தெறி படத்தில் ஒரே விஜய் தான் ஆனால் ஜோசப் குரிவில்லா, விஜயகுமார் மற்றும் பேய் போன்றது என மூன்று கான்செப்டில் வருவார்.

theri
அடுத்தது மெர்சல் படத்தில் டாக்டர் மாறன், மேஜிசியன் வெற்றி மற்றும் அப்பா வெற்றிமாறன் என ட்ரிபிள் ஆக்ஷன்.

mersal
இந்நிலையில் பிகில் படத்தில் இரண்டு விஜய்கள் தான், இது டபிள் ஆக்ஷன் படம் என அனைவரும் போஸ்டர் பார்த்து நினைத்து வந்த சூழலில் குழப்பம் வந்துள்ளது. ராயப்பன், மைகேல் இருவர் என நினைத்து வந்த சூழலில் பிகில் என மூன்றாமவர் உள்ளது போல உள்ளது ட்ரைலர். எனினும் பிகில், மைக்கேல் இருவரும் ஒருவரா, அல்லது படம் ட்ரிபிள் ஆக்ஷனா; இயக்குனர் அட்லீயின் ட்விஸ்ட் என்ன என்பது படம் வந்த பின்பு தான் அது வெளிச்சமாகும்.

bgil trailer
உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுக ..
