டைவர்ஸ் நடிகையை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.

காதல் கணவரை பிரிந்த அந்த நடிகைக்கு டைவர்ஸ் நடிகை என்றே பெயர் வந்துவிட்டது. விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற பிறகு நடிகை குட்டி குட்டி உடை அணிந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

நடிகை விவாகரத்திற்கு பிறகே மகிழ்ச்சியாக உள்ளார், அவரை பார்த்தால் கணவரை பிரிந்த மாதிரியா இருக்கிறது. கொஞ்சமும் கவலை இல்லாமல் ஜாலியாக பார்ட்டிகளுக்கு சென்று கும்மாளம் போடுகிறார் என்று அவரை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

ஒரு பெண் கணவரை பிரிந்த பிறகு தனக்கு பிடித்தபடி ஆடை அணிந்து மேக்கப் போடுவது ஒரு குற்றமா என்று ஒரு சிலர் நடிகைக்காக பேசவும் செய்கிறார்கள்.

கணவரை பிரிந்த பிறகு மிகவும் கடினமாக இருந்தாலும் வாழக் கற்றுக் கொண்டதாக நடிகை தெரிவித்துள்ளார்.