அஜித்தின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர்களால் தல கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் தல என்ற பெயருக்கு தனி அடையாளத்தை கற்பித்தவர் அஜித். வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே பண்ணும் அஜித்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஆவலாகவே காத்திருக்கின்றனர்.

ஹாலிவுட் ஸ்டைலில் வெளியான விவேகம் படத்தின் மூலம் பல நாள் கேலிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். குண்டான தனது உடம்பை ஃபிட்டாக மாற்றினார். அவரின் நடிப்புக்கு சலாம் போடப்பட்டது. இதை தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவிற்கே அஜித் கொடுத்து இருக்கிறார். அதற்கு அஜித் கூறிய காரணம், என் நண்பர் என்னை தவிர பிற நடிகரிடம் படம் பண்ண செல்லும் போது வெற்றி இயக்குனராகவே செல்ல வேண்டும். அதனால், தான் விஸ்வாசம் அவருக்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

அதிகம் படித்தவை:  2.0 உடன் ஒப்பிட்டால் எந்திரன் வெறும் டீஸர் தான் ! 2.0 (VFX Featurette) மேக்கிங் வீடியோ உள்ளே !

அஜித்தின் பிறந்தநாள் நாளை மே 1ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. என்னதான் அஜித் அடிக்கடி ரசிகர்களிடம் உரையாடாமல், அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தாலும், அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு மட்டும் அளவில்லாதவை தான். பட்டி தொட்டியெங்கும் அவர் பிறந்தநாள் பட்டையை கிளப்பும்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் 'கத்தி' படத்தை தொடர்ந்து, காக்கா முட்டை இயக்குனரின் 'கடைசி விவசாயி'

இந்நிலையில், தனது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் அஜித், அவரது ரசிகர்களால் கடும் கோபத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையை சேர்ந்த ரசிகர்கள் பாரத பிரதமரே என அடைமொழியிட்டு அரசியல் பேசும் போஸ்டர்களால் தான் அஜித் கடும் அப்செட்டில் இருக்கிறார். அரசியல் குறித்து பேசியதால் தான் ரசிகர் மன்றத்தை அடியோடு கலைத்தவர் தல என்பது குறிப்பிடத்தக்கது.