தமிழ் சினிமா தற்போது வேறு தளத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது. காக்கா முட்டை, தரமணி, விசாரணை என ஒருப்பக்கம் கிளாஸ் திரைப்படங்கள் வந்தாலும் இதெல்லாம் விருது தாண்டி பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் கலக்குவது இல்லை.ஆனால், ஒரு படம் கடல் கடந்து வேறு நாட்டில் நடக்கும் வர்த்தகமே நம் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்.

அப்படி தொடர்ந்து பாலிவுட் படங்களே அஞ்சுவது ஷங்கரின் படத்திற்கு மட்டும் தான், ஒரு நடிகராக ரஜினிக்கு எந்த அளவிற்கு ஒரு மார்க்கெட் உள்ளதோ, அதே அளவிற்கு ஷங்கருக்கு இயக்குனராக உள்ளது.அந்த வகையில் இன்று விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்கள் ரூ 100 கோடி கிளப்பிற்கு அடித்துக்கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ரூ 100 கோடி கிளப்பை ஓபன் செய்தது ஷங்கரின் சிவாஜி படம் தான், அதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவின் வர்த்தகம் பெரிதாகியது.

தற்போது ராஜமௌலி ஷங்கரை முந்தி ரூ 1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டார், ஆனால், ஷங்கரின் சவாலோ பாகுபலி இல்லை, அதையும் தாண்டி ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 2.0 உருவாகி வருகின்றது.

இப்படத்தின் வசூல் இந்திய சினிமாவை உலக அரங்கில் தலை நிமிரச்செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் கௌரவம் ஷங்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்