டேவிட் வார்னர் செய்த அந்த ஒரு தவறு.. வெல்லக்கூடிய போட்டியை RCB கையில் ஒப்படைத்த மோசமான தோல்வி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 ஆறாவது போட்டியில் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே போட்டி முழுவதுமாகவே ஹைதராபாத் அணியின் கையில் தான் இருந்தது.

ஆனால் ஆட்டத்தின் 17-வது ஓவரில் பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, சமத் ஆகியோர்களின் விக்கெட்டுகளை இழந்து போட்டியை தோல்வியின் வசம் கொண்டு சென்றது. இதற்கு முக்கியமான காரணம் கடைசி வரை நின்று போட்டியை வெற்றி பெறச் செய்யக்கூடிய வீரர்கள் இல்லாதது தான்.

நேற்று ஹைதராபாத் அணி வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைய அந்த அணியின் அணி தேர்வே காரணமாக இருந்தது. ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர்கள் இல்லை.

நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் எடுக்கப்பட்டு இருந்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். வில்லியம்சன் பல போட்டிகளில் ஹைதராபாத் அணியை கடைசி வரை நின்று வெற்றி பெற வைத்துள்ளார்.

Willamson-Cinemapettai.jpg
Willamson-Cinemapettai.jpg

ஆனால் வார்னர் எனோ இவருக்கு இரண்டு போட்டிகளிலும்அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. வில்லியம்சன் இன்னும் தயாராகவில்லை. அதனால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இந்த புறக்கணிப்பு தான் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்