Tamil Cinema News | சினிமா செய்திகள்
யார் அந்த வடிவேல் பாலாஜி? ரசிகர்களை கோபப்படுத்திய விஜய் டிவி பிரபலம்
வடிவேல் பாலாஜி இறந்த செய்தி தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் யார் அவர் என்று கேட்டது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகைப்புயல் வடிவேலு மீது உள்ள அதீத அன்பால் தன்னுடைய பெயரை வடிவேல் பாலாஜி ஆக மாற்றி கொண்டு நிஜ வாழ்க்கையிலும் வடிவேல் ஆகவே வாழ்ந்து வந்தவர் பாலாஜி.
இவர் மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் விஜய் டிவியில் இருக்கும் சில இவரை கண்டு கொள்ளாதது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமீபத்தில் விஜய் டிவி, டிஆர்பிகாக நடிகை வனிதாவை வைத்து எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா விஜய் டிவியில் இருக்கும் வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா இதுவரை பாலாஜியை சந்தித்ததே இல்லை எனவும், அவருடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் ஒரே சேனலில் பணியாற்றும் வனிதா, வடிவேலு பாலாஜியை தெரியாது என்று கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரமாரியாக அவரை திட்டி வருகின்றனர்.
