Photos | புகைப்படங்கள்
ராயப்பன் கெட்- அப்பில் தியேட்டர் வந்த ரசிகை. போட்டோ உள்ளே.. அதிலும் அந்த டாட்டூ சூப்பர்மா
பெரிய ஹீரோவின் படங்கள் ரிலீசுக்கு முன் பல தடைகளை தகர்த்து ரிலீஸ் ஆகவேண்டிய சூழலில் தான் இன்று தமிழகம் உள்ளது. அப்படி தான் கதை திருட்டு, ஸ்பெஷல் ஷோ கிடையாது என்றெல்லாம் பல போராட்டத்துக்கு பின் விஜய் – நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பிகில் உலகெங்கும் ரிலீஸானது. ரசிகர் மன்றம் வாயிலாக பிளெக்ஸ், கட் – அவுட் தவிர்த்து, ஆதரவற்றவருக்கு உதவிகள் என பல விஷயத்தை விஜய் ரசிகர்கள் செய்தனர்.
எனினும் படம் பார்க்க செல்லும் சமயத்தில் தங்கள் ஹீரோ அணிந்து போன்றே உடை, ஸ்டைலில் செல்வதும் ரசிகர்களின் வழக்கம் தான். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஸ்பெஷல் டி ஷர்ட், ஹீரோவின் டிரஸ் போலவே அணிந்து செல்வது வாடிக்கை. எனினும் ஒரு ரசிகை அது போல செய்ய சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிட்டார் அந்த பெண்மணி.
இவரை சிங்கப்பெண்ணே என அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

bigil
