fbpx
Connect with us

ஒரே போஸ்டரில் மாநாடு ஈஸ்வரன் சிம்பு! ஈஸ்வர் அல்லா தேரே நாம் என கொண்டாடும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே போஸ்டரில் மாநாடு ஈஸ்வரன் சிம்பு! ஈஸ்வர் அல்லா தேரே நாம் என கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. சிலம்பரசன் டு சிம்பு டு STR என மனிதர் ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ற மாதிரி மாறினார்.

நடிகைகளுடன் காதல், ஷூட்டிங் செல்வது இல்லை, அங்கிள் மாதிரி அதீத குண்டு என முன்பு இவர் பல மைனசுகளில் சிக்கினாலும் தற்போது தோற்றத்தில் மட்டும் மாற்றத்தை கொடுக்காமல் செயலிலும் மாற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஷூட்டிங் துவங்கும் முன்பு, ஈஸ்வரன் என்ற ப்ரொஜெக்டை முடித்து கொடுத்துவிட்டார் ஸ்லிம் சிம்பு. ஏற்கனவே ஈஸவரன் போஸ்டர், டீஸர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், இன்று மாநாடு படத்தின் முதல் லுக் வெளியானது. அப்துல் காலிக் என்ற ரோலில் சிம்புவின் போஸ்டர் அது.

ஒரே நேரத்தில் ஈஸ்வரன் மறுபுறத்தில் அப்துல் என இரண்டு போஸ்டர்களையும் ஒன்றாக இணைத்து அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

STR

மதநல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளது இந்த போஸ்டர்.

Continue Reading
To Top