fbpx
Connect with us

Cinemapettai

வெறித்தனமாக அன்பை வெளிபடுத்திய திரிஷாவின் ரசிகர்.. அதிர்ந்து போன இணையதள வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறித்தனமாக அன்பை வெளிபடுத்திய திரிஷாவின் ரசிகர்.. அதிர்ந்து போன இணையதள வீடியோ

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதற்கு பின்னர் முன்னணி ஹீரோக்களை ஆச்சரியப்படும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சி பெற்றார்.

அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் மௌனம் பேசியதே, சாமி, கில்லி, ஆறு, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, 96 என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சினிமா மேல் உள்ள மோகத்தினால் தற்போதுவரை திருமணத்தைப் பற்றி கூட யோசிக்காமல் நிறைய சாதிக்க வேண்டும் என்று திறைமையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 5 படங்கள் நடித்து வருகிறார்.

திரிஷா மீது அதீத காதல் கொண்ட ரசிகன் ஒருவன் 96 படத்தின் இசையின் பின்னணியில், கண்ணை கட்டிக்கொண்டு, தலைகீழாக திரிஷாவின் முகத்தை படம் வரைந்துள்ளார்.

இந்த வீடியோவை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார், தனது மீது பாசம் வைத்துள்ள ரசிகருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகரை கொண்டுள்ள திரிஷாவிற்கு, தமிழ் சினிமாவில் எப்போதும் மவுசு குறையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

முழு வீடியோ பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top