fbpx
Connect with us

Cinemapettai

காரில் கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த ரசிகர். ரஞ்சிக்கோப்பை போட்டியில் சலசலப்பு.

News | செய்திகள்

காரில் கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த ரசிகர். ரஞ்சிக்கோப்பை போட்டியில் சலசலப்பு.

இச்சம்பவம் நடந்தது நம் ரஞ்சிக்கோப்பை போட்டியில் தான். அட ஆமாங்க டிரைவ்-இன் ஹோட்டல், டிரைவ்-இன் தியேட்டர், இந்த வரிசையில் டிரைவ் இன்-கிரிக்கெட் கிரௌண்டயும் சேர்த்து விட்டுட்டாருங்க ஒரு குசுமப்பான் டெல்லிக்காரர்.

ரஞ்சிக்கோப்பை:

நம் இந்தியாவில் நடை பெரும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரஞ்சிக்கோப்பை. இந்த சீசனில் மொத்தம் 28 அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவில் இருந்து முதன் முதலில் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய “ரஞ்சித்சிங்ஹஜி”. இப்போட்டிகளுக்கு அவரின் பெயரான ‘ரஞ்சிக்கோப்பை’ வைக்கப்பட்டது. ரஞ்சி இங்கிலாந்து மற்றும் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடியவர்.

என்ன தான் இன்று ஐபில், இந்தியா- ஏ, யூ-19 என்று வீரர்கள் நன்றாக விளையாடி இந்திய டீம்மில் இடம் பிடிப்பது தற்போதைய ட்ரெண்ட். அன்றும், இன்றும், என்றும் ரஞ்சிக்கோப்பையில் ஒருவர் நன்றாக விளையாடினால், கண்டிப்பாக இந்திய அணியில்  வாய்ப்பு கிட்டும் என்பது தான் உண்மை.

டெல்லி-உத்திர பிரேதச அணிகள் மோதல்:

குரூப் ஏ பிரிவில் இந்த இரு அணிகள் விளையாடிய போட்டி நவம்பர் 1 டெல்லியில் தொடங்கியது. பொதுவாக கோட்லா மைதானத்தில் தான் டெல்லி அணி தங்கள் ரஞ்சி போட்டிகளை விளையாடும். இங்கு நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 {பாண்டியாவின் கேட்ச்} போட்டி நடை பெரும் காரணத்தால். இந்த நான்கு நாள் போட்டி ஏர் போர்ஸ் காம்ப்ளெக்ஸில் உள்ள “பலம் கிரௌண்டில்” மாற்றி அமைக்கப்பட்டது.

UP vs Delhi. Group A Ranji Match. Delhi Players celebrate fall of wicket.

சர்ர்ர்ர் என்று சீறிப்பாய்ந்த கார்:

Ishant Sharma, Manan Sharma watches the car inside the ground.

மூன்றாவது நாள் ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் உள்ள நிலையில் யு.பியின் அக்ஷ்தீப் நாத், மற்றும் இம்தியாஸ் அஹமத் பேட்டிங் செய்த பொழுது ஒரு சில்வர் கலர் வாகன்.ஆர் கார் முழு ஸ்பீடில் கிரௌண்டினுள் புகுந்தது. மேலும் பிட்ச் அருகில் வந்து சர் என்று திரும்பி நின்றது. அந்த வண்டியிடம் இருந்து கம்பிர் அடிபடாமல் தப்பித்ததே பெரிய விஷயம்.

Car halted on the Pitch by the driver

அந்த காரை ஓட்டியவர் கிரிஷ் சர்மா என்ற வாலிபர். இவர் தப்பி செல்ல வழி இல்லாமல் கேட் கதவை மூடிவிட்டனர். பின்னர் அங்கு இருந்த செக்யூரிட்டி பொதுமக்களின் உதவி கொண்டு இவர் காரை நிறுத்தி, இவரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Girish Sharma being nabbed by the Security Personnel.

என்ன காரணம்:

கேட்டில் இருக்க வேண்டிய செக்யூரிட்டி, மேட்ச் பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே வந்து விட்டார். அந்த நேரத்தில் அவ்வழியே கிரிஷ் சர்மா தன் தங்கையை ஏர்போர்ட்டில் விட்டு விட்டு வந்துள்ளார். கேட்டில் யாரும் இல்லாதால் காரை மைதானத்தின் உள்ளே விட்டார். பிட்ச் அருகில் வந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.

Gate at Palam Ground

இவரை அடித்து விசாரித்த பொழுது ‘நான் கிரிக்கெட் வீரர்களை அருகில் பார்த்து பேச ஆசைப்பட்டேன். இரண்டு நிமிட புகழுக்கு ஆசை பட்டு, இப்படி செய்து விட்டதாகவும்.’ கூறியுள்ளார்.

இவர் பிட்சின் நடுவில் தன் காரை நிறுத்தியதால் அன்று போட்டி நிறுத்தப்பட்டது. அடுத்த நாள் தொடங்கிய  போட்டியில் டெல்லி அணி நான்கு விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிகழ்வை பற்றி சுரேஷ் ரெய்னா தன் ட்விட்டர் கணக்கில்,

“மிகவும் வருத்தமாக உள்ளது, ஆட்டம் நின்றதற்கு . எனினும் அணைத்து வீரர்களும் நலமாக உள்ளனர்.”

இஷாந்த் சர்மா தன் ட்விட்டர் கணக்கில்:

“டிரைவ் இன் தியேட்டர் போல் டிரைவ் இன் மேட்ச் ஆக்கிவிட்டார். இது மிகவும் அதிர்ச்சி கரமான இந்த காட்சியை நாங்கள் பார்த்தோம்.”

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

நாயின் ஓட்டம், பறவைகள் அட்டகாசம், ஏன் தேனீக்களின் வருகையால் கூட ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சில சர்வதேச போட்டிகளில் தனக்கு பிடித்த வீரரை பார்க்க சுவர் ஏறிக்குதித்த ரசிகரால் கூட இதற்கு முன் மேட்ச் நிறுத்தப்பட்டு நாம் பார்த்துள்ளோம். எனினும் காரில் கிரௌண்டினுள் புகுந்தது 8 போட்டு பிரபலமாக முயன்றது இதுவே முதல் முறையாக நம் ரஞ்சிக்கோப்பை போட்டியில் நிகழ்ந்துள்ளது. இதுவே கடைசி முறையாகவும் இருந்தால் சரி.

இது என்னடா இப்படி ஆகிவிட்டது என்று பிசிசிஐ விசாரணை நடத்த சொல்லி உத்தரவு போட்டுள்ளதாம். கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top