Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமந்தா – சின்மயி இருவரையும் ஒப்பிட்ட ரசிகர் ! இருவரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?
சமந்தா அக்கினேனி
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் . கடந்த வருடம் தான் காதலித்த நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் பலர் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்துகொள்வார்கள் ஆனால் இவர் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார். தற்பொழுதும் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன் என படங்கள் வண்டிகட்டி நிற்கின்றது.
சின்மயி

chinmayee- samantha
நம்மில் பலருக்கு பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடுவதுமட்டுமன்றி ரேடியோ ஜாக்கி, டிவி தொகுப்பாளினி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று அனைத்திலும் கலக்குபவர். சமீரா ரெட்டி, பூமிகா, தமன்னா, திரிஷா, சமந்தா என்று பலருக்கு பின்னணி குறை கொடுத்துள்ளார். அதிலும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் சமந்தாவுக்கு இவர் டப்பிங் கனகச்சிதமாக பொருந்தி இருக்கும்.
@Samanthaprabhu2 looking like @Chinmayi exactly… pic.twitter.com/xXZQJE6Zgj
— gangapranay (@gangapranay) July 29, 2018
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் “சமந்தா , சின்மயி போலவே உள்ளார்.” என்ற போட்டோவுடன் இருவரையும் டாக் செய்தார்.

SAMANTHA
அதற்கு சின்மயி “அவரை அசிங்கம் படுத்தாதீங்க நண்பா. அவர் என்னை விட அழகு ஜாஸ்தி.” என்று தன்னடக்கத்துடன் பதில் டீவீட்டினார்.
Dont insult her dude. She is far more pretty
— Chinmayi Sripaada (@Chinmayi) July 29, 2018
சமந்தா ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். சும்மா விடுவாரா. அதற்கு மிரட்டும் தொனியில் பதிலும் தந்தார்.
Aiiiiiiiiiiii….. where can I find you ? https://t.co/xJpQy3smpZ
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 29, 2018
“ஏய்.. எங்க வந்தால் உன்னை பார்க்கலாம் …” என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார்.
