ஐபில் 2018

ஐபில் போட்டிகளின் 11 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகின்றது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. நேற்றய போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதின.

CSK

டாஸ் வென்ற கார்த்திக் பௌலிங் தேர்ந்தெடுத்தார். சென்னை அணி 177 ரன்கள் எடுத்து. தோனி அதிகபட்சமாக 25 பாலில் 43 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா ஸ்பின் பௌலிங் வாயிலாக சென்னை அணியை திக்கு முக்காட வைத்தது. பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஷுபம் கில் 36 பாலில் 57 , தினேஷ் காத்திக் 18 பாலில் 45 ரன் எடுத்து எளிதாக வெற்றிபெற்றனர்.

உள்ளே புகுந்த ரசிகர்

சென்னை அணியின் பேட்டிங் பொழுது, கேப்டன் தோனி, பேட்டிங் கோச் ஹஸ்ஸி இருவரும் டிவியை பார்த்து வீடியோ அனாலிசிஸ் செய்து வந்தனர். அந்த நேரத்தில் சி எஸ் கேவின் யெல்லோ ஜெர்சி போட்ட நபர் தோனி அருகில் வந்துவிட்டார். ஹஸ்ஸி பதட்டமாகி விட்டார். எனினும் தோனி கூலாக அவர் முதுகில் ஆசிர்வாதம் செய்யும் விதமாக தட்டினார். அதற்குள் செக்குரிட்டி வந்து அவரை வெளியேற்றினர். இதனை முரளி விஜய் நமட்டு சிரிப்புடன் பார்க்க. பிராவோ , கரண் சர்மா மற்ற வீரர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இதோ வீடியோ லிங்க்

தோனி இதையும் கூலாக எந்த பந்தாவும் இல்லாமல் சமாளித்தார். சூப்பர் தல நீங்க.