Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நாயகன்..
இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணியில் இவர் இயக்கிய நானும் ரௌடிதான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையஏக் கிளப்பியது.
அடுத்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட விக்னேஷ் சிவன், சூர்யா – கீர்த்தி சுரேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தின் துணையுடன் எடுத்து முடிந்த தானாசேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 1980-களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்ட அந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அந்த படத்தின் பாடல்கள் ஸ்ட்ரீமிங்குக்காக இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிளாட்டினம் ப்ளே பட்டனே யூ ட்யூப் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து, காதலி என கிசுகிசுக்கப்படும் நயனுடன் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த இடைவெளிக்குப் பின்னர், தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் விக்னேஷ் சிவன் இப்போ ரொம்ப பிஸி.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்ட படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஸ்கிரிப்ட் ரெடி பண்ண அவர் அவகாசம் கேட்டதால், சிவகார்த்திகேயன் – ஸ்டூடியோ கிரீன் இணையும் படத்தை இயக்கும் வாய்ப்பு ராஜேஷ்.எம் கைக்கு சென்றது. இதுகுறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள ராஜேஷ், இந்த படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. அவர் டைம் கேட்டதால், திரைக்கதையுடன் தயாராக இருந்த நான் சிவாவை இயக்குகிறேன். விக்னேஷ் தற்போது சிவாவுக்குத்தான் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அநேகமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ்தான் இயக்குவார் என்று நினைக்கிறேன் என மனம் திறந்துள்ளார்.
