திறமை இருந்தும் சம்பளத்தை குறைத்த தரமான ஹீரோ.. சினிமாவுல இது புதுசா இருக்கே

சமீபத்தில் ஒரு ஹீரோ தயாரிப்பாளர் சொல்லிய கதையை கேட்டு தனது சம்பளத்தை கிட்டத்தட்ட 70% குறைத்துள்ளார். இதைக்கண்டு ஆடி போன தயாரிப்பாளர் அவர் நல்ல மனதிற்காகவே அவருக்கு என்ன வேணாலும் செய்யலாம் என்று பேசி வருகிறாராம்.

ஆரம்பத்தில் துண்டு துக்கடா ஹீரோவாக இருந்த அந்த நடிகர் இப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே கைத்தட்டல் அள்ளினார். மேலும் அந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன்பின் குணச்சித்திர கதைகளிலும் நடித்து அசத்தினார். சமீபத்தில் கூட சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற ஒரு படத்தில் வாய் பேச முடியாதவராய் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விதார்த். இந்த படத்தில் இவருடைய நடிப்பு திரையரங்கில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது.

இப்படி படிப்படியாக சினிமாவில் உயர்ந்து, 50 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், இப்பொழுது தயாரிப்பாளர் ஒருவர் கூறிய கதையால் ஈர்க்கப்பட்டு 15 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார். பெரும்பாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்கள் சம்பள விஷயத்தில் ஏறுமுகத்தில் இருப்பதையே குறியாக வைத்திருப்பார்கள்.

படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்தும் ஹீரோக்கள் இடையே இவர் சினிமா துறையில் புதுசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்து கொண்ட விதார்த் இறங்கிப் போன அவருடைய பெருந்தன்மையான குணம் தற்போது கோலிவுட்டில் பெருமையாகப் பேசப்படுகிறது.

படத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர்கள் பெரும்பாலான தொகையை ஹீரோக்களுக்கும் சம்பளமாகவே கொடுத்து விடுவதால் தரமான படத்தை உருவாக்க முடியவில்லை என்ற கருத்து சமீபகாலமாகவே நிலவி வருகிறது. அதற்கு ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை நியாயமாகத் கேட்டால் கோலிவுட்டில் இன்னும் நல்ல நல்ல படங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்