Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியை அசிங்கப்படுத்திய பிரபல இணையத்தளம்

மிகவும் மோசமான நாயர்கள் பட்டியலில் தளபதி விஜயை சேர்த்து இருக்கும் பிரபல இணையத்தளம் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கையில் வைத்து இருப்பவர் தளபதி. வருடா வருடம் இரண்டு படங்களை நடித்து வெளியிட்டால் தான் அவருக்கே திருப்தி ஏற்படும். காரணம் முக்கியமான பண்டிகை தினங்களில் ரசிகர்கள் விஜயை எதிர்பார்ப்பார்கள். தனக்கு ஓய்வு இல்லையென்றாலும் பரவாயில்லை, தன் ரசிகர்கள் தான் முக்கியம் என நினைப்பவர். இதனாலே, அவரை யாராவது தவறாக பேசினால் ரசிகர்கள் இணையத்தில் கொதித்து எழுந்து விடுவார்கள். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், விஜயை வசை பாடினாலும் ரசிகர்களிடம் இருந்து செம டோஸ் காத்திருக்கும்.

இந்நிலையில், பிரபல இணையத்தளம் ஒன்று கோலிவுட்டின் மோசமான நடிகர்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், சாந்தனு, ஆதி உள்ளிட்ட இளம் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷாலும், ஜெயம் ரவி, டி.ஆர்.சிலம்பரசன் ஆகிய ஸ்டார் நட்சத்திரங்களும் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. 6வது இடத்தில் தளபதி விஜய் இருப்பது பெரிய ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டார் பவரை பெற இவருக்கு தகுதி இல்லை. இவரிடம் வசனம் பேசுவது மற்றும் நடனம் மட்டுமே எதோ இருப்பதாகவும், மற்றப்படி ஒன்றும் இல்லை என்ற விமர்சனமும் இடம் பெற்று இருக்கிறது. விஜயிற்கு மட்டுமல்லாமல் அந்த பட்டியலில் இருக்கும் எல்லா நடிகர்கள் குறித்தும் அவதூறான விமர்சனங்களே இடம் பெற்று இருக்கிறது.

தற்போது இந்த பட்டியல் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனங்களையும் ட்வீட் தட்டி வருகின்றனர். விரைவில் இந்த பிரச்சனை பெரிதாக பரவினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top