தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

surya
surya

சூர்யா செல்வராகவன் படத்திற்கு பிறகு இயக்குனர் KV ஆனந்த் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இருவரும் ‘அயன்’ என்னும் பிளாக்பஸ்டர் படத்தையும் மாற்றான் என்ற படத்தையும் கொடுத்தனர்.அதன் பிறகு Kv ஆனந்த் கோ,அனேகன்,கவண் தொடர் வெற்றிய கொடுத்து தான் ஒரு வெற்றி இயக்குனர் என்பதை நிலைநாட்டினார். இவர்கள் இனையும் படத்தை AGS தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

surya
surya

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.’

கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில்  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர்.

Suriya_KV Anand_
Suriya_KV Anand_

நிவேதிதா மற்றும் சங்கீதா ‘அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு’ என்றும் அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும் என ஒருவர் கிண்டலடிக்க இன்னொருவர், அமிதாப் பச்சனை இந்தப் படத்தில் உட்கார வச்சே தான் நடிக்க வைக்கணும் என கலாய்த்துள்ளார்.

amitabhbachchan-shamitabh-1
amitabhbachchan-shamitabh-1

இதனால் சூர்யா ரசிகரகள் கோபத்தில், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சூர்யா பேசும் வசனத்தை ‘நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை”எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்’ என்ற வசனத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.