அட்லீ, விஜய்யை வைத்து முதன்முதலாக இயக்கிய படம் தெறி. குட்டி பேபி நைனிகா, விஜய் காம்பினேஷன் படத்தில் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது. படமும் ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.

இந்நிலையில் தெறி படம் வெளியாகி 365 நாட்கள் ஆகவிட்டதால் பிரபல ரோஹினி திரையரங்கம் அதனை கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதாவது ஏப்ரல் 14ம் தேதி காலை 9 மணியளவில் தெறி படத்தை திரையிட இருக்கின்றனர். இதற்கான முன்பதிவை ரசிகர்களும் போட்டிபோட்டு செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 14ம் தேதி பிரபல தொலைக்காட்சியில் பைரவா, திரையரங்கில் தெறி என ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.