fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் தமிழில் வில்லனாக விஸ்வரூபம் எடுக்கும் பிரகாஷ்ராஜ்.. மிரளும் கோலிவுட்!

prakash-raj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் தமிழில் வில்லனாக விஸ்வரூபம் எடுக்கும் பிரகாஷ்ராஜ்.. மிரளும் கோலிவுட்!

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் தான் ‘எனிமி(enemy)’.

ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் சகோதரர்களாக இணைந்து நடித்த  இந்த நண்பர்கள் அதற்குப் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது நட்பின் நிமித்தமாக இருவரது படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் தலையை காட்டி வந்தனர்.

தற்போது இந்தப் படத்தில் மற்றொரு முன்னணி தமிழ் நடிகர் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு தாறுமாறான கதையில் ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடிக்கப் போவதாக அறிவித்ததோடு, அதற்கு எனிமி என்று டைட்டிலும் வைத்தனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தை இருமுகன் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி விட்டதாம்.

இந்த நிலையில் தென்னிந்திய மொழிகளில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் போன்ற பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருபவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது ‘எனிமி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

vishal-arya-cinemapettai

vishal-arya-cinemapettai

எனவே, ஆர்யா விஷாலுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top