Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தைப் போல சண்டைக்காட்சியில் முதுகெலும்பு உடைந்த தளபதி.. ரகசியத்தை உடைத்த ஸ்டண்ட் மாஸ்டர்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு  தயாராக உள்ளது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இந்த நிலையில் விஜய் ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய முதுகு எலும்பிற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை பிரபல சண்டை மாஸ்டரான கனல் கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

அதாவது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கனல்கண்ணன் ஒரு சண்டைக் காட்சியின் போது தளபதியின் முதுகெலும்பு  டிஸ்லோகெட் ஆகிவிட்டது என்றும், அதன் பிறகு சில நாட்கள் கழித்து தளபதி மீண்டும் அதே போன்ற பல ஸ்டண்ட் காட்சிகளை நடித்து அனைவரையும் மிரள வைத்தார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கனல் கண்ணன் தனது பேட்டியில், ‘இதுதான் தளபதி விஜயின் வளர்ச்சிக்கு காரணம். அவர் தான் வளர்ந்துவரும் காலத்தில் கூட கடினமான ஸ்டண்ட் காட்சிகளை செய்தார்’ என்று தெரிவித்திருக்கிறார் .

இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, தளபதி வெறியர்களை கண்கலங்க செய்துள்ளது.

kanal-kannan

kanal-kannan

Continue Reading
To Top