அஜித்திற்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், சில பெரிய இடங்களில் இருந்தும் வந்த வாழ்த்துகளால் கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் தனி இடம் பிடித்து இருக்கும் நடிகர் அஜித். இளைஞர்கள் முதல் பிரபலங்கள் வரை பல ரசிகர்களை கொண்டு இருக்கிறார். காதல் மன்னனாக, அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக, ஹிட் ஸ்டாராக என பல அவதாரங்கள் எடுத்த அஜித்திற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். உழைப்பாளர் தினமான நேற்று அஜித்தின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல திரையரங்களில் அவரின் வெற்றி படங்கள் திரையிடப்பட்டது. ரசிகர்கள் அவரின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து புதுப்பட ரிலீஸ் போல் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், தல பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளாத்திலும் பெரும் பாராட்டுக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் சில எதிர்பார்க்க முடியாது சில பாராட்டுகளும் அவருக்கு கிடைத்து இருக்கிறது.

டுவிட்டர் மூமெண்ட்ஸ் இந்தியா டுவிட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், தேசிய அளவில் உள்ள ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் தமிழ் சினிமாவின் தலக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

இதைப்போல, உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒரு செய்தி தளத்தின் டுவிட்டர் கணக்கில் இருந்தும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், அஜித் தனது ரசிகர்களுக்கு தல. தனது படங்களை வியாபாரம் செய்ய பெர்சனலாக முயற்சி செய்யாத மனிதர். நல்ல படம் வியாபாரத்தையும், விளம்பரத்தையும் தேடிக்கொள்ளும் என நம்புபவர் இவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அஜித்தின் பெயர் தல என பதியப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களுக்கும், கோலிவுட்டிற்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.