தமிழில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை போல வட இந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சி வாய்ஸ் இந்திய என்ற நிகழ்ச்சி பிரபல தொலைகாட்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி சிறுவர்களுக்காக நடைபெற்றது பாடகர் ஷான் ஹிமேஷ் ரேஷ்மியா என்ற பாடகர் கலந்து கொண்டார், மேலும் இசையமைப்பாளர் பாபன் ஆகியோர் நடிவர்களாக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு இடையில் நடுவர்கள் ஹோலி கொண்டாட்டமும் கொண்டாடுகிறார்கள் இதை பாபன் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார் அப்பொழுது பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணம் பூச திடீர் என அந்த சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார் இதை கொஞ்சம் கூட எதிர்பாராமல் அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து தடுமாறினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதால், இது தொடர்பாக பாபன் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.